சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
கவலைக்கிடமாக இருந்த பாடகர் எஸ்.பி.பியின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியானது. பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக இன்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி மூலமாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.