பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காதல் மனைவிக்காக, வேற லெவலில் புதுமையான, நவீன வீட்டை பரிசளித்த நபர்! இதுல அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??
தனது காதல் மனைவிக்காக, 72 வயது நிறைந்த நபர் புதுமையான சூழலும் வீட்டை கட்டியுள்ள சம்பவம் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு போஸ்னியா எர்செகோவினா நாட்டின் செர்பாக் நகர் அருகில் வசித்து வருபவர் 72 வயது நிறைந்த வோஜின் குசிக். தனது மனைவியின் மீது அளவற்ற அன்பு காதல் கொண்டு விளங்கிய அவர் அதன் அடையாளமாக தனது மனைவிக்காக சுழலும் வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார்.
மேலும் வீட்டின் உள்ளே இருந்தவாறே, தனது மனைவி வீட்டை சுற்றி இருக்கும் இயற்கை அனைத்தையும் ரசிக்கும் வகையில் அவர் இத்தகைய புதுமையான நவீன வீட்டை அவர் மனைவிக்கு பரிசளித்துள்ளார். இந்த வீட்டை வோஜின் குசிக் 6 வருடங்களில் கட்டியுள்ளார்.
மேலும் இந்த வீட்டில் சுழலும் வேகத்தை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக வேகமாக சுழன்றால் வெறும் 22 வினாடிகளிலும், மெதுவாக சூழன்றால் ஒரு முறை சுற்றி முடிக்க 24 மணி நேரம் ஆகுமாம். இந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்துள்ளது.