மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்கால் கெட்டுப்போன முதல் நாள் படப்பிடிப்பு.! முதல் மரியாதை திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்.!
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் என்ற பட்டத்தோடு தன்னுடைய வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிக்காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக இன்றளவும் இருந்து வருபவர் தான் சிவாஜி கணேசன்.
எந்தத் திரைப்படமானாலும் சரி, அதில் எப்பேர்பட்ட கதாபாத்திரமானாலும் சரி அந்த கதாபாத்திரத்தில் தனக்கான தனித்துவத்தை அமைத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நிற்கும் தன்மை கொண்டவர் தான் சிவாஜி கணேசன். அவர் நடிப்பை இன்றளவும் திரை துறையில் பலர் பின்பற்றி வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
சிவாஜி கணேசன் பல்வேறு திரைப்படங்களை நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படத்தையும் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது. அந்த வரிசையில் பாரதிராஜா, சிவாஜி கணேசன் கூட்டணியில் வெளியான முதல் மரியாதை திரைப்படமும் ஒன்று. தற்போது அந்த திரைப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கிறது. முதலில் ஒரு வேறு மொழி திரைப்படத்தின் கதையை மையமாகக் கொண்டு பசும்பொன் என பெயரிடப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, சிவாஜி கணேசனிடம் டேட் வாங்கி வைத்தார். ஆனால் அது பற்றி விவாதம் நடத்தியபோது பட குழுவினர் எதிர்பார்த்த கதை அமையவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, அந்த திரைப்படம் கைவிடப்பட்டு, பின்னர் கதையாசிரியர் ஆர்.செல்வராஜ் சொன்ன பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பெண்ணுக்கு அந்த ஊர் பெரிய மனிதர் மீது காதல் என்ற ஒன்லைன் தான் பின்னாளில் முதல் மரியாதை திரைப்படமானது இந்த திரைப்படம் சிவாஜி கணேசன், பாரதிராஜா உள்ளிட்ட இருவருக்குமே தங்களுடைய கரியரின் மிக முக்கியமான படமாக மாறிப்போனது. ஆனால், இந்த திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் இது பற்றி அவரிடம் கேட்டபோது, ஏதோ ஒன்று குறைகிறது என தெரிவித்துவிட்டு, சிவாஜி விக் வைத்தது தான் பிரச்சனை என்று சொன்ன பாரதிராஜா, சிவாஜியிடம் நேரில் சென்று, நாளை முதல் விக் வைக்க வேண்டாம் மேக்கப் போட வேண்டாம் குளித்துவிட்டு அப்படியே வந்தால் போதும் என தெரிவித்து விட்டார். இதைக் கேட்ட சிவாஜி கணேசன் காலையிலேயே இதனை சொல்லியிருக்கலாமே. இப்போது ஒரு நாள் படப்பிடிப்பு வீணாகிவிட்டதே என்று தெரிவித்துள்ளார்.
அதற்கடுத்த நாள் இயக்குனர் பாரதிராஜா சொன்னது போலவே வந்த சிவாஜி கணேசன், படத்தை முழுமையாக நடித்துக் கொடுத்தார் அந்த திரைப்படம் இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக இருக்கிறது.