மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 68 வெற்றியடைய... இயக்குனர் தான் வில்லனா? கோலிவுட்டில் பரவிய செய்தி.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தத் திரைப்படத்தில் முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் தளபதி வெங்கட் பிரபு மற்றும் இவன் கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 25 வது திரைப்படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதல் திரைப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக பட குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மேலும் ஒரு செய்தி திரைப்படத்தைப் பற்றி வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியின் படி எஸ்ஜே.சூர்யா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். தற்போது வரை இதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக சிறப்பாக நடித்திருப்பார் எஸ்ஜே.சூர்யா. மேலும் விஜய் உடன் மெர்சல் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.