மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸில் இருந்து பாதியில் வெளிவந்தாலும்.. ஜனனிக்கு அடித்த பெரிய வாய்ப்பு..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து போட்டியாளராக ஜனனி பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டாலும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, விஜய்யின் அடுத்த படமான தளபதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜனனி தற்போது கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 6 இறுதிப்போட்டியில் ஜனனி இது குறித்து பேசினார். மக்களிடையே நான் தெரிய வேண்டும் என்று தான் இங்கு வந்தேன் அது இப்போது நடந்துள்ளது. மக்கள் என்மீது அன்பைப் பொழிகிறார்கள்.
என்னை அவர்கள் குழந்தையாகவே பார்க்கிறார்கள். நான் வந்த வேலை முடிஞ்சுது” என்றார் ஜனனி. பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கு ஊருக்கு (இலங்கை) சென்றீர்களா என்று கமல் ஜனனியிடம் கேட்டதற்கு, அவர் இல்லை என்று பதிலளித்தார்.
உங்களால் மறுக்க முடியாத அளவுக்கு இங்கே வாய்ப்பு கிடைத்துள்ளது என்று விஜய் 67 படம் குறித்து கமல் மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு ஜனனி, ஆமாம் சார் என்று கூறியுள்ளாராம்.