வில்லியாக மாறும் ஜெயம் ரவி பட நடிகை.! யார் தெரியுமா.?



Jayam ravi movie actress going to act negative role

2006ம் ஆண்டு "வட்டாரம்" திரைப்படத்தில் திரைத்துறையில் அறிமுகமானவர் வசுந்தரா காஷ்யப். தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று, காலைப்பனி, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், போராளி, சொன்னா புரியாது, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Ravi

முன்னதாக மாடல் அழகியாக இருந்து மிஸ். சென்னை போட்டியில் பங்கேற்ற வசுந்தரா காஷ்யப், மிஸ் கிரியேட்டிவிட்டியாக முடி சூட்டப்பட்டார். அதன் பின்னரே இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது "மாடர்ன் லவ் சென்னை" என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வசுந்தரா காஷ்யப், "ஹீரோயின் என்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டும் தான் நடிக்க முடியும். ஆனால் அதுவே எதிர்மறையான கேரக்டர்களில் நடித்தால் நம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

Ravi

ஏற்கனவே அதுபோல் நெகடிவ் ரோலில் நடித்துள்ள நான், இப்போது மல்டி ஸ்டாரர் கதையிலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறேன். இப்படம் பெண்களை மையப்படுத்திய மாடர்ன் க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது" என்று வசுந்தரா காஷ்யப் கூறினார்.