பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. முத்து திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகரா! அட.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 90ஸ் காலகட்டங்களில் அவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் தற்போதும் ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்துள்ளது.
அவ்வாறு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, பெரும் வசூல் சாதனையும் படைத்த திரைப்படம் முத்து. இந்த திரைப்படம் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடியுள்ளது. முத்து திரைப்படத்தில் ஹீரோவாக ரஜினி நடித்துள்ளார். மேலும் அவருடன் ரகுவரன், மீனா, ராதாரவி,காந்திமதி, வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
முத்து திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சரத்பாபு. இந்த கதாபாத்திரமும் ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் மலையாள நடிகர் ஜெயராம்தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சினையின் காரணமாக அவர் அப்படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முத்து படத்தில் நடிகர் ரஜினியை அடிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும் என்பதாலும் ஜெயராம் அப்படத்தில் நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.