தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"மனைவியின் பிரசவத்தின் போது ஜெயம் ரவி செய்த செயல்" மனம் வருந்திய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் ஜெயம் ரவி.
சமீபத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், இறைவன் திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்று வந்தது. இதனையடுத்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது போன்ற நிலையில், ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரின் பிரசவ காலம் குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, "ஜெயம் ரவி என் பிரசவத்தின் போது என் அருகில் கூட இல்லை. வேலையில் பிஸியாக இருந்தார். இது எனக்கு அந்த நேரத்தில் கஷ்டமாக இருந்தாலும், நான் புரிந்து கொண்டேன். அவரோட வேலை அப்படி" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.