#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துல்கர் சல்மானுடன் இணைந்த கல்யாணி பிரியதர்ஷன்.. வெளியான தகவல்.!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் தற்போது மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதில், துல்கர் சல்மானின் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதைகளை கொண்டுள்ளதால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இதில் இவர் நடித்துள்ள 'கிங் ஆப் கோதா' திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும், இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடிகளுக்கு கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.