மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன நடக்குது தெரியலையே.! ஸ்ருதி ஹாசனுடன் காதலர் தினத்திற்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து பிரபலமானவராக இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இவ்வாறு முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
மேலும் அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் தனது வெளிநாட்டு காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருவார். இதுபோன்ற நிலையில் தனது தந்தையான கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் இணைய பக்கமானன ராஜ்கமல் பிலிம்ஸ்சின் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.
அந்த பதிவில் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் இருப்பது போன்ற புகைப்படமும், "இனிமேல் டெலுலு இஸ் த புது சொலுலு, இதுவே ரிலேசன்ஷிப், இதுவே சிச்சுவேசன்ஷிப், இதுவே டெல்யூசன்ஷிப்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் இது படமா, பாடலா, காதலர் தினத்திற்கு எதுவும் ஸ்பெஷலா என்று குழப்பத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இதனையடுத்து ஸ்ருதி ஹாசன் இயக்க போகும் புதிய பாடலில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.