#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவால் பாதிக்கபட்ட திமுக எம்.பி கனிமொழி எப்படி வந்து வாக்களித்துள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிபிஇ பாதுகாப்பு உடையணிந்து வந்து வாக்களித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு முடிவடைந்தது. இதில் பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.
மேலும் 6 மணிக்கு மேல் கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோயாளிகள் அனைவரும் மிகவும் பாதுகாப்புடன் பிபிஇ உடையணிந்து வந்து வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி அவர்களும் முழு கவச உடையணிந்து சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.