மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்" கொடூர வில்லனாக ஆர்.கே சுரேஷ்: நடிகை கயல் ஆனந்தியின் வொயிட் ரோஸ் படத்தின் பதைபதைப்பு டிரைலர் இதோ.!
பூம்பாறை முருகன் ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில், நடிகை கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் வொயிட் ரோஸ் (White Rose). இப்படம் ஏப்ரல் 05ம் தேதி திரைக்கு வருகிறது.
கயல் ஆனந்தி, ஆர்.கே சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித, பேபி நக்ஸத்ரா, சசிலியா, தாரணி ரெட்டி, சுழியன் பரணி, வர்ஷினி, ஹாசன், ராஜசிம்மன், ராமநாதன் உட்பட பலரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
கே. ராஜசேகர் இயக்கத்தில், வைரமுத்துவின் பாடல் வரிகளில், சுதர்சனின் இசையில், கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கில் அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
மிரட்டலான, பதைபதைக்க வைக்கும் காட்சிகளுடன் வெளியகியுள்ள இப்படத்தின் டிரைலர், உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.