"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
இந்த குட்டி குழந்தை விஜய் பட நடிகையா.? வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து பிசியான நடிகையாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகையர் திலகம் திரைப்படத்தில் இவரின் சாவித்திரி கதாபாத்திரம் பாராட்டப்பட்டு தேசிய விருது பெற்றார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது வெப் சீரியஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இது போன்ற நிலையில் கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.