திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வெறித்தனம், வெறித்தனம்" கேரள விமான நிலையத்தில் விஜய்க்காக ரசிகர்கள் செய்த செயல்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் 90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, பாங்காக் போன்ற பல பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இதனை அடுத்து ரஷ்யாவிலும் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கேரளாவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விஜய் இறுதியாக காவலன் படப்பிடிப்பின் போது கேரள மாநிலத்திற்கு 14 வருடங்களுக்கு முன்னதாக சென்றிருந்தார்.
அப்போது விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பது குறிப்படத்தக்கது. இதனை அடுத்து தற்போது மீண்டும் விஜய் கேரளாவிற்கு வரவிருக்கிறார் என்ற செய்தியை இணையத்தில் வைரலகியதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இதன்படி கேரளா விமான நிலையத்திற்கு வந்தடைந்த விஜயை கேரள மாநில ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் வரவேற்றனர்.
மேலும் படப்பிடிப்பு தளத்திலும் விஜயிற்காக பேனர்கள் மற்றும் பதாகைகளை வைத்து ரசிகர்கள் அவரை வரவேற்க காத்திருந்தனர். இதனை அடுத்து விமான நிலையத்தில் விஜய்க்காக பல மணி நேரங்கள் காத்திருந்த ரசிகர்களை விஜய் கையசைத்தும், வணக்கம் கூறியும் தனது அன்பை வெளிப்படுத்தினார். விமான நிலையத்தை சுற்றி படப்பிடிப்பு நடக்கப்பட உள்ளதால் பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் விஜய் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.