விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்டது.!
லட்சுமி இராமகிருஷ்ணனின் மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?.. 6 மாதமாக 20 மருத்துவர்கள் வந்தும் குணப்படுத்த இயலாத அவலம்..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை லட்சுமி இராமகிருஷ்ணன். இவர் திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்தாலும், மக்களிடம் அவரை பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்த்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிதான்.
மலையாள திரையுலகம் மூலமாக திரைக்கு அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் நடித்திருந்தார். நடிகை, சமூக ஆர்வலர், இயக்குனர் என்று பன்முகத்தை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 2012 ல் ஆரோகணம் படத்தையும் இயக்கியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் சமூக பிரச்சனைகள் மூலமாக பல சர்ச்சையில் சிக்கிக்கொள்வர்.
இவர் இயக்க்கிய புதிய படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், சமுத்திரக்கனி, அபிராமி, மிஸ்கின், ரோபோ சங்கர் உட்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தனது சமூக வலைதளபக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவாவது,
"இனிய ஓணம் அன்பு நண்பர்களே. எங்களது வீட்டில் சிறிய கொண்டாட்டம் இருந்த நிலையில், எங்களின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. 6 மாதமாக கடுமையான நெருக்கடி. கடவுளின் அருளால் 20 மருத்துவர்கள் தங்களால் இயன்றதை செய்தனர். இருப்பினும் எங்களின் குழந்தை முழுமையாக குணமடையவில்லை என்றாலும், உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.