மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் ஸலாம் திரைப்படம் வெளியீடு எப்போது?: அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட லைகா.!
லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salaam).
படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இசையமைப்பு பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், லால் ஸலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுவதாக இருந்து, பின் அது தள்ளிப்போனது. தற்போது படம் பிப்ரவரி மாதம் 09ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.