திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ் மொழியில் தோனியின் தயாரிப்பில் முதல் திரைப்படம்.. Lets Get Married படத்தின் டிரைலர் லிங்க் உள்ளே.!
நடிகர் ஹரிஷ் கல்யாண், நதியா, இவனா, யோகிபாபு உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் Lets Get Married. எம்.எஸ் தோனியின் படத்தயாரிப்பு நிறுவனமான தோனி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு எம்.எஸ் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். இந்த படம் மாமியார் - மருமகள் இடையேயான பந்தத்தை உணர்த்தும் படமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இன்று படத்தின் டிரைலர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. நகைச்சுவை மற்றும் குடும்ப கலவை கொண்ட படமாக எல்.ஜி.எம் உருவாகி இருக்கிறது. படம் தோனியின் முதல் தயாரிப்பு ஆகும்.