கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Jayaram about Mayilsamy: திருவண்ணாமலை கோவிலுக்கு குட்டி யானை கேட்ட மயில்சாமி - மனம்திறந்த நடிகர் ஜெயராம்..! கண்ணீருடன் நெகிழ்ச்சி பேட்டி.!
மறைந்த சமூக சேவகர், சிவபக்தர், நடிகர் மயில்சாமி திருவண்ணாமலை கோவிலுக்கு குட்டி யானை கேட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பலகுரல் மன்னனாகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம்வந்தவர் மயில்சாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது சார்ந்த பகுதிக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என அரசியலியிலும் விறுவிறுப்புடன் களமிறங்கி இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காலமாகினார். சிவன் பக்தரான அவர் சிவராத்திரி அன்றே இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ஜெயராம் அளித்த பேட்டியில், "தமிழ் திரையுலகில் யாரிடம் கேட்டாலும் மயில்சாமி நல்ல நண்பன், மனிதன் என கூறுவார்கள். அவரை போலவே நானும் மிமிக்கிரி செய்து சினிமா துறைக்கு வந்தவர்கள். அதனாலேயே எங்களுக்குள் நல்ல பிணைப்பு இருந்தது. நாங்கள் எங்கு சந்தித்தாலும் மிமிக்கிரி மற்றும் திரைத்துறை பற்றியே பேசுவோம். எங்களால் இயன்றவர்களுக்கு உதவி செய்துள்ளோம்.
வாரம் ஒருமுறையாவது எனக்கு அவர் தொடர்பு கொண்டு பேசுவார். சிவராத்திரி அன்றாவது என்னுடன் திருவண்ணாமலைக்கு நான் வரவேண்டும் என்று அழைத்து இருந்தார். என்னால் வர இயலவில்லை. கடந்த 2 மாதங்களாக என்னை தொடர்பு கொண்டு திருவண்ணாமலை கோவிலுக்கு குட்டி யானை வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்தார். நான் ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்து இருந்தேன். அதற்குள் அவர் அண்ணாமலைக்கே சென்றுவிட்டார்" என உருக்கத்துடன் பேசி சென்றார்.