திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளியில் வந்தவுடன் கூடிய கேங்க்.! மாயா யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெருமளவில் ரீச்சான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மாயா. இவர் இதற்கு முன் கமலின் விக்ரம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் அவர் அதற்கு முன்னே சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் மாயாவுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. அவர் இறுதிவரை சென்று டைட்டிலை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பூர்ணிமாவுடன் சேர்ந்து அவரது சில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை உண்டாக்கியது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா வெற்றியாளரானார். மணி சந்திரா இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் மாயா நேரில் சென்று ஜோவிகாவை சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.