தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
செய்தி ஊடகங்கள் கேரளா மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என பிரபல நடிகர் அறிவிப்பு
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் செய்தி ஊடகங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீது தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது. பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பியுள்ளது. கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 33 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.
இந்த நிலையில், பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிதிக்கு உதவித்தொகை வழங்கியுள்ளனர்.
இன்று கேரளா முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது கேரளாவில் பலியின் எண்ணிக்கை 167 உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.