மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி டிராமா படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து கலக்கியிருக்கும் பிரபல நடிகை! வெளியான மாஸ் தகவல்!
அண்மையில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஓ மை கடவுளே. இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து அசோக் செல்வனுக்கு ஏராளமான படவாய்ப்புகள் வர துவங்கியது.
அதனைத் தொடர்ந்து அவர் ரீத்தி வர்மா மற்றும் நித்யா மேனனுடன் அனி சசி இயக்கும் படத்தில் நடிக்கிறார். பின்னர் அவர் புதுமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு லியான் ஜேம்ஸ் இசையமைக்கிறார். மேலும் ஏ.ஆர் சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி டிராமா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆரம்பத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை நிஹாரிகா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவருக்கு திருமணம் முடிவான நிலையில் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனைத்தொடர்ந்து இப்படத்திற்கு கதைப்படி அழகும், இளமையும் உள்ள குடும்பப்பாங்காக இருக்கும் நடிகை தேவை என்ற நிலையில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.