#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீரியலில் களமிறங்கிய Mr & Mrs சின்னத்திரை புகழ் ஜாக்! அதுவும் எந்த சீரியலில் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்க்கைத் துணையுடன் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் கலகலப்பாக டாஸ்க்குகளுடன் அனைவரும் ரசிக்கும் வகையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடகி ரோஷினி மற்றும் அவரது கணவர் ஜாக். மிகவும் ரொமான்டிக் ஜோடியாக வலம் வந்து இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டனர். மேலும் இவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜாக் தற்போது விஜய் டிவி சீரியலில் நடிகராக களமிறங்கியுள்ளார். அதாவது அவர் விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் . நடிக்க துவங்கியுள்ளார். அந்தக் காட்சி வீடியோவுடன் ஜாக் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.