பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
நாய்க்குட்டியுடன் செல்லமாக கொஞ்சி விளையாடும் மிருணால் தாகூர்.. வைரலாகும் போட்டோ.!

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மிருனால் தாகூர். இவர் இந்தியில் முதன் முதலில் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். விளம்பர படங்களில் நடித்தும், மாடல் அழகியாகவும் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
மேலும் இவர் இந்தியில் ஒரு சில சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் பின்பு தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார். முதன் முதலில் சீதாராமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. மேலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கவர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். Ithanponbu சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான ஹேய் நான்னா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் மிருனால் தாகூர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். தற்போது தனது செல்ல பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.