திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2023ஆம் ஆண்டு எப்படி இருந்தது.? வீடியோவாக வெளியிட்ட நடிகை மிருணாள் தாகூர்..
ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருபவர் மிருணாள் தாகூர். ஆரம்ப தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தான் தன் திரை வாழ்க்கையை தொடங்கினார். இவர் 2018ஆம் ஆண்டு "லவ் சோனியா" என்ற ஹிந்திப் படத்தில் தான் முதலில் அறிமுகமானார்.
2022ஆம் ஆண்டு தெலுங்கில் "சீதா ராமம்" படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றார். மேலும் இந்தப் படத்திற்காக 2 சைமா விருதுகளையும் வென்றுள்ளார் மிருணாள் தாகூர். சமீபத்தில் நானியுடன் இவர் நடித்த "ஹாய் நன்னா" திரைப்படம் வெளியானது.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ள மிருணாள் தாகூர், மராத்தியில் மூன்று படங்களில் நடித்துள்ளார். மேலும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ள மிருணாள் தாகூர், சில இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிருணாள் தாகூரும் ஒருவர். இந்நிலையில் இவர் தற்போது அடிக்கடி போட்டோ ஷூட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வந்தன.
இது போன்ற நிலையில் சமீபத்தில் மறுநாள் தாகூர் வீடியோ வெளியிட்டார் அந்த வீடியோவில் கடந்த 2023 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.