மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் தல தோனி - படம் பற்றிய அப்டேட்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமாக இருப்பவர் எம் எஸ் தோனி. இவர் இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர். இவரது தலைமையில் தான் இந்திய அணியானது உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்தது.
எம் எஸ் தோனி இந்திய அணியின் 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு 2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது இவர் ஐபிஎல் போட்டி தொடர்களில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
ஓய்விற்குப் பிறகு இயற்கை விவசாயம், ஆடை நிறுவனங்கள் என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் மகேந்திர சிங் தோனி தற்போது சினிமாவிலும் கால் பதிக்க இருக்கிறார். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பு கம்பெனியை அறிமுகப்படுத்தினார் எம் எஸ் தோனி.
அப்போதிருந்தே தான் முதலில் தயாரிக்கப் போகும் திரைப்படம் தமிழில் தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இவரது முதல் தயாரிப்பு திரைப்படம் தமிழ் மொழியில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
ரமேஷ் தமிழ்மணி இயக்கவிருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் லவ் டுடேபுகழ் இவானா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரீட் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தான் கொண்ட அன்பின் வெளிப்பாடாக தன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார் எம் எஸ் தோனி என்பது குறிப்பிடத்தக்கது