மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் பயங்கர நெருக்கமாக பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்! வைரலாகும் வீடியோவால் செம ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரம்யா தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெருமளவில் வைரலானது. அதனை தொடர்ந்து அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் அவர் விஜய்டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்துகொண்டார். இந்நிலையில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் ரம்யா பாண்டியன் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் செம்பருத்தி தொடரில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துவரும் கார்த்திக்குடன் இணைந்து முகிலன் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த தொடர் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த வெப்சீரிஸின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.