#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை; மும்தாஜை தொட்ட ஷாரிக்.. கோபத்தில் எச்சரிக்கும் மும்தாஜ்!!
போட்டியாளர்கள் இடையே சண்டை வந்தால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்ற எண்ணம் பிக்பாஸ் பார்க்கும் எல்லோரிடத்திலும் உள்ளது.
பிக்பாஸ் மீதான, ஆர்வம் தற்போது எல்லாருக்கும் குறைந்து வரும் நிலையில், நிகழ்ச்சியின் மீதான சுவாரிஸ்யத்தை ஏற்றும் வகையில் சில போட்டியாளர்கள் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டாலும், இவர்கள் தங்களுடைய பெயர் மக்கள் மத்தியில் டாமேஜ் ஆகிவிடக்கூடாது என, கோபத்தை கூட முழுமையாக காட்டாமல் உடனடியாக மன்னிப்பு கேட்கிறார்கள். இதனால், இவர்கள் போலியாக நடிப்பதாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அம்மா - பிள்ளை என்ற பாசத்தில் இவ்வளவு நாட்களாக இருந்து வந்த, ஷாரிக் மற்றும் மும்தாஜ் ஆகியோருக்குள் சண்டை வெடிக்கிறது.
ஷாரிக் எதோ மும்தாஜிடம் சொல்கிறார். அதற்கு மும்தாஜ் "நீ என்னுடைய ஆசிரியர் இல்லை என்னிடம் இப்படி நடந்து கொள்ளாதே என கூறி எச்சரிக்கிறார்". இதை தொடர்ந்து பேசும் ஷாரிக் "உங்க குரல் ஏறக்கூடாது" என கூறுகிறார். இதற்கு மும்தாஜ் "இது என் இஷ்டம். உனக்கு கேட்க கூடாது என்றால் காதில் ஊசி போட்டுக்கோ" என கூறுகிறார்.
ஷாரிக்கும் மும்தாஜ் வயதுக்குக்கூட மரியாதை கொடுக்காமல், மீண்டும் "நீங்க போட்டுக்கோங்களேன் வாயில் பிளாஸ்திரி. இல்லை நான் வாயில் பிளாஸ்திரி போடுவேன்" என கூறுகிறார்.
ஷாரிக்கின் பேச்சால் மிகவும் கோபத்திற்கு ஆளான மும்தாஜ் "வா வந்து டச் பண்ணி பாரு" என கூறுகிறார். ஷாரிக் ஒரே ஒரு விரலால் மும்தாஜ் முதுகை தொடுகிறார். பின் மும்தாஜ் "வேண்டா ஷாரிக் மரியாதையோடு இருந்துக்கோ" என கண்ணீருடன் கூறுகிறார்.
அடுத்து என நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.