#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகர் ஆனந்த் பாபுவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? அவரைப்பற்றிய சில தகவல்கள்.
தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர்போன ஜாம்பவான்களில் ஒருவர் நடிகர் நாகேஷ். இவர் மறைந்திருந்தாலும் இவரது நகைச்சுவை இன்றும் மறையவில்லை. இவருக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்களில் கடைசி மகன் ஆனந்த் பாபு தந்தை வழியில் சினிமாவில் இறங்கி பல்வேரு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தங்கைக்கோர் கீதம், புது வசந்தம், சேரன் பாண்டியன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஆனந்த் பாபு.
தற்போது 56 வயதாகும் இவர் சமீபத்தில் வெளியான பியார் பிரேம காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியலில் காதம்பரிக்கு அப்பாவாக, விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.