திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நயன் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.. GQ விருது விழாவில் சிறப்பு.!
தென்னிந்திய மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகை நயன்தாரா 20 வருடங்களுக்கும் மேலாக திரை துறையில் இருந்து வருகிறார். வயது ஆக ஆக தனது மார்க்கெட்டையும் அவர் உயர்த்தி வருகிறார். தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படத்தில் அறிமுகமான அவர் பாலிவுட் படங்களிலும் தனது சாம்ராஜ்யத்தை நிலைநாட்டியுள்ளார். இவர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்தது.
இதையடுத்து தனது சம்பளத்தை நயன்தாரா ரூ.12 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா முதல் படத்திலேயே முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. நடிப்பு மட்டுமல்லாமல் நயன்தாரா பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வருகின்றார். அவரது வளர்ச்சி அசாதாரணமானது என்று தான் கூற வேண்டும்.
GQ's Most Influential Young Indians 2024 #GQPowerList2024 🎥📸 pic.twitter.com/BWujrrddEf
— Nayanthara✨ (@NayantharaU) April 26, 2024
இந்நிலையில் நடிகை நயன்தாரா GQ இந்தியா மேகசின் நடத்திய விருது விழாவில் கலந்துகொண்டு, 'மோஸ்ட் இன்புளுயன்சிஸ் யங் இந்தியன் 2024' எனும் விருதை பெற்று இருக்கிறார். இந்த விருது விழாவில் நயன்தாரா இணைந்திருந்த கவர்ச்சி உடை ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடித்த நயன்தாரா சமீப காலமாகவே கவர்ச்சிகளுக்கு நோ சொல்லி மிகவும் கண்ணியமாக நடித்துக் கொண்டு இருக்கின்றார். நீண்ட நாட்களாக அவரை கவர்ச்சி உடையில் காணாமல் வறட்சியில் இருந்த ரசிகர்கள் தற்போது அவரது இந்த புகைப்படத்தை பார்த்து சந்தோஷம் அடைந்துள்ளனர்.