#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கொஞ்சம் கூட தொழில் பக்தி இல்ல" அஜித்தை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் அஜித்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'துணிவு' மிகப் பெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பின்பு அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு "விடாமுயற்சி' என்று பெயரிடப்பட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இது போன்ற நிலையில், பல மாதங்களாகியும் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் அஜித் தனது பைக்கில் சுற்றுலா செல்வதையும் நிறுத்தவில்லை. தொடர்ந்து தனது குடும்பத்துடனும், தனியாகவும் சுற்றுலா சென்று கொண்டு இருக்கிறார்.
மேலும், 'விடாமுயற்சி' அப்டேட் கேட்டு ரசிகர்கள் சலித்து விட்டனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் நடிகர் அஜித்தை, விடமுயற்சி வருமா வராதா என்று இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர் அஜித் தற்போது ஓமன் நாட்டில் பைக் டூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.