கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!



Hyderabad Youth Dies By Heart Attack 

 

இந்தியாவை பொறுத்தவரையில் இளவயது மாரடைப்பு மரணங்கள் என்பது வெகுவாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறான மரணங்களுக்கு உணவுப்பழக்க வழக்கம் உட்பட பல்வேறு விஷயங்கள் காரணமாக கூறப்பட்டாலும், உண்மை விஷயம் உறுதி செய்யப்படவில்லை.

இளைஞருக்கு நேர்ந்த சோகம்

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கம்மம் மாவட்டத்தில் சிஎம்ஆர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சம்பவத்தன்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது, பி டெக் பயின்று வரும் மாணவர் கிரிக்கெட் விளையாடினார்.

இதையும் படிங்க: இளைஞர்களின் கொண்டாட்டத்தால் சோகம்; 55 வயது நபர் மாரடைப்பால் பலி.!

மயங்கி விழுந்து பலி

மைதானத்தில் பீல்டரிங் செய்தபோது இளைஞர் வினய் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் மயங்கி விழுந்ததும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவரின் மரணம் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கார் ஓட்டும்போதே மாரடைப்பில் பிரிந்த உயிர்; தறிகெட்டு பாய்ந்த வாகனம்.. பதறவைக்கும் திக்திக் காட்சிகள்.!