மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்கிரிமெண்ட் தர மாட்டேங்குறாங்க.! லைவில் கதறிய விஜய் டிவி பிரபலம்.!
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வளம் வருபவர்தான் பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதிலும் விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இடையே நீண்ட கால நட்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தற்சமயம் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக அந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் தொடர்பாக லைவ் வீடியோவில் பிரியங்கா ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்காக காலை 11 மணியளவிலேயே நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்து விட்டேன் என்று கூறினார்.
அதோடு விஜய் தொலைக்காட்சிக்காக நான் அதிகமாகவே உழைக்கிறேன். ஆனால் சம்பளம் தான் உயர்த்தி தர மாட்டேன் என்கிறார்கள் என தன்னுடைய ஆதங்கத்தை கூறியிருக்கிறார் தொகுப்பாளர் பிரியங்கா.