லாக்டவுனால் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பிய நடிகை.! என்ன செய்துள்ளார் தெரியுமா..!



one-of-the-famous-actress-did-village-work

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு குறிப்பிட்ட வேலைகளை செய்ய மட்டுமே அரசு அனுமதித்துள்ளது. அதன்படி படப்பிடிப்பு மற்றும் சீரியல்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பிரபலங்கள் பலரும் சில வித்தியமான செயல்களை செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். அதே போல் தான் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தனது தந்தையின் வயலில் இறங்கி நாற்றுநடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress keerthi

அதாவது நடிப்பை மட்டும் நம்பியில்லாமல் லாக்டவுன் நேரத்தில் தனது தந்தையின் வயலில் இறங்கி திவீர விவசாயம் செய்து வருகிறார். இதற்கு முன்பு டிராக்டர் ஒன்றில் உழுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.