Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
செம மாஸ் காட்டும் சிம்பு... பத்து தல வெளியான 2 வது நாளிலேயே இத்தனை கோடி வசூலா... மகிழ்ச்சியில் படக்குழு!!
தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் தனக்கென்று வைத்திருக்கும் புது ஸ்டைலின் மூலம் இளைஞர்களை பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், வரவேற்கும் உள்ளது.
தற்போது இவர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தான் பத்து தல. இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்தில் சிம்புவுடன் 2-வது ஹீரோவாக கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. பத்து தல திரைப்படம் வெளியான இரண்டாவது நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 18 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.