HMPV Virus: திருப்பதி வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! மாஸ்க் கட்டாயம்.!



  Tirupati TTD Announce Mask in Necessary HMPV Virus 

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய எச்.எம்.பி.வி வைரஸ் பரவல், இந்தியா, மலேஷியாவிலும் உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மாஸ்க் கட்டாயம்

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான கூட்டத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், பி.ஆர் நாயுடு வெளியிட்ட அறிவிப்பில், "எச்.எம்.பி.வி வைரஸ் ஆபத்து காரணமாக பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும். வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு 10 ம் தேதி தங்கத்தேரோட்டம் நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: இந்தியாவில் உறுதியானது எச்எம்பிவி வைரஸ்; மீண்டும் ஊரடங்கு? நெட்டிசன்கள் கேள்வி..!

HMPV Virus

திருமலையில் 4500 காவலர்கள் மொத்தமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஜனவரி 10 முதல் 19 வரை வைகுண்ட ஏகதேசி திருவிழா நடைபெறும். முன்பதிவு செய்த, இலவச டிக்கெட்டுக்கான அனுமதி உள்ளோருக்கு மட்டும் சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதி வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #JustIN: இந்தியாவே உஷார்.. 8 மாத குழந்தைக்கு உறுதி செய்யப்பட்டது HMPV வைரஸ்..!