மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இது தெரியுமா உங்களுக்கு? உண்மையிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி யார்னு பார்த்தீர்களா!! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஸ்டாலின் முத்து. இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
நடிகர் ஸ்டாலின் பாரதிராஜா இயக்கத்தில் உருவான தெற்கத்தி பொண்ணு சீரியலில் மூலம் அறிமுகமானவர். பின்னர் ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்கள், பாசமலர், சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை என தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சினிமாவிலும் கொம்பன், கொடிவீரன் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமாகிவிட்டார்.
ஸ்டாலின் முத்து வேறு யாருமல்ல. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாரதிராஜாவின் அண்ணன் மகன் ஆவார். தேனி மாவட்டத்தை சேர்ந்த
ஸ்டாலினின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவராம். ஆனால் ஸ்டாலின் தனது சித்தப்பாவின் வழியை பின்பற்றி சினிமாவில் களமிறங்கி, பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.