மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க மட்டும் நல்லவங்களா?.. வீட்டவிட்டு வெளிய போங்க..!! மூன்றாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..! வைரல் ப்ரோமோ உள்ளே..!!
அண்ணன் - தம்பி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கூட்டுகுடும்ப வாழ்வியலை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பி வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் மூத்த அண்ணனாக மூர்த்தியும், அவரின் சகோதரர்களாக ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரும் இருக்கின்றனர்.
கடந்தவாரம் வரை எந்தவிதமான பிரச்சனை இல்லாமல் இருந்த கூட்டுக்குடும்பத்தில் திடீர் கலவரமாக ஜீவாவை அனைவரும் ஒதுக்குவது, சில இடங்களில் ஜீவாவுக்கு முன்னுரிமை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜீவா தனிமையான சூழ்நிலையை உணர்ந்து வந்தார். இந்த நிலையில் திருமணத்தில் கண்ணன் செய்த விளையாட்டுதனத்தால் தற்போது அவர்களின் குடும்பம் ஒட்டுமொத்தமாக பிரிகிறது.
இவர்களின் பிரச்சினை விவாதம் திருமணமண்டபத்தை தாண்டி வீட்டிலும் சென்று சேர்ந்த நிலையில், முழு பிரச்சனைக்கும் கண்ணனே காரணம் என்று குடும்பத்தினர் பேச, அங்கு ஐஸ்வர்யா கண்ணனுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். அப்போது முல்லை நீங்கள் மற்றும் சரியானவர்களா? பாதி சம்பளத்தை வீட்டில் கொடுத்துவிட்டு மீதியை ஏன் மறைத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஐஸ்வர்யா எங்களுக்கு பணம் தேவை இருக்கிறது என்று ஐஸ்வர்யா பதில் சொல்ல, விருப்பம் இருப்பவர்கள் இந்த வீட்டில் இருங்கள் என்று மூர்த்தி இறுதியாக பிரச்சனையை முடிக்கிறார். இதனால் அவர்களின் குடும்பம் இரண்டாக உடைந்து, மீண்டும் மூன்றாக உடையுமா? என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.