மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த காட்சியில் நிச்சயம் கவர்ச்சி இல்லை, புனித மட்டுமே... நிர்வாணமாக நடித்ததன் காரணத்தை கூறிய பவி டீச்சர்...
ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரகிதா. அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து பார்த்திபனின் படமான இரவின் நிழல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிய பவி டீச்சர் சென்றுள்ளார். ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பார்த்திபன். இப்படத்தில் கிட்டத்தட்ட 19 நொடிகள் பவி டீச்சர் ஆடை இன்றி நடித்துள்ளார்.
இது குறித்து பவி டீச்சரிடம் கேட்ட போது அவர் இவ்வாறாக பதில் அளித்துள்ளார். நான் புடவை அணியும் போதே சரியாக இருக்கிறதா என பலமுறை பார்க்கக்கூடிய சராசரி பெண்தான். ஆனால் இந்த படத்தில் ஆடையின்றி நடிக்க சொன்னபோது எனக்கும் பயமாகத்தான் இருந்தது. அதன் பிறகு அந்த கதாபாத்திரம் எவ்வளவு புனிதமானது என்பதை பார்த்திபன் சார் புரிய வைத்தார்.
அதனையடுத்து பார்த்திபன் சார் வந்து என் பெற்றோரிடம் கண்டிப்பாக இந்த காட்சியை யாரும் தவறாக பார்க்க மாட்டார்கள் என சம்மதத்தை வாங்கினார். அதன் பிறகு என் பெற்றோர் சம்மதத்துடன் அந்த காட்சியில் நடித்தேன் என பவி டீச்சர் கூறியுள்ளார். மேலும் அந்த காட்சியில் நிச்சயம் கவர்ச்சி இல்லை, புனிதம் மட்டும் இருக்கும் என இரவின் நிழல் படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.