சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ஐயோ.. பவர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
உயர் இரத்த அழுத்தம் காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாக உள்ள நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் சீனிவாசன். அன்றில் இருந்து இவரை பற்றியும், இவரது நடிப்பு பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சினிமாவில் பெயர் சொல்லும் இடத்தை பிடித்திருக்கிறார் சீனிவாசன்.
லத்திகா படத்தை அடுத்து நடிகர் சந்தானம் உடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்துள்ளார் சீனிவாசன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பவர் ஸ்டாரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமடைய செய்தது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார் சீனிவாசன்.
தற்போது சினிமா, அரசியல் என பயங்கர பிஸியாக இருந்து இவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக பவர் ஸ்டாருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.