#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை! யாரோ கடத்திட்டாங்க? மனைவி புகார்!
லத்திகா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார். இந்தப்படம் அவரது வாழ்க்கையில் சற்று வித்தியாசமான படம்தான். தன்னை கேலி செய்தவர்களையும், அசிங்க படுத்தியவர்களையும் கண்டுகொலாமல் அவை அனைத்தையும் தனது வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
நடிகர் சந்தானம் தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார் சீனிவாசன். படங்களில் நடித்து பேரும், புகழும் பெற்றாலும் மற்றொரு பக்கம் இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் குவிந்தன.
இந்நிலையில் தனது கணவர் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி ஜுலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவரிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் இந்நிலையில் அவர் காணவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து சீனிவாசன் மனைவி ஜூலி கொடுத்த புகார் அடிபடையில் அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சீனிவாசன் ஊட்டிக்கு சென்று விட்டதாகவும் குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக சென்று விட்டார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மீது பல மோசடி புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.