மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. 150 கோடி கொடுத்தும், நடிக்க நோ சொன்ன பாகுபலி நாயகன்! அதுவும் எதில் தெரியுமா?
பிரம்மாண்டமான பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தெலுங்கு நடிகரான இவருக்கு இப்படத்தை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
நடிகர் பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம், சலார் மற்றும் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி வரும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இவ்வாறு இவரது மார்க்கெட் உயர்ந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களும் நடிகர் பிரபாஸை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் பிரபாஸுக்கு காலணி, சோப்பு, மின்னணு பொருட்கள் என ஏராளமான விளம்பர வாய்ப்புகள் வந்துள்ளது. அந்த விளம்பரங்களில் நடித்திருந்தால் அவருக்கு 150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் நடிக்க பிரபாஸ் மறுப்பு தெரிவித்து விட்டாராம். மேலும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிவிட்டதால் எத்தகைய பொருட்களின் விளம்பரங்களில் நடிக்கிறோம் என்ற கவனத்துடன் அவர் செயல்பட்டு வருவதால் பல விளம்பர வாய்ப்புகளை அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.