மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு கோடி சம்பளம்.. வடிவேலுவை நடனமாட வைக்க கமிட்டான பிரபல நடிகர்! யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் இல்லாத மீம்ஸ்கள், ட்ரோல்ஸ்களே கிடையாது எனலாம்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், குக் வித் கோமாளி சிவாங்கி, ரெடிங் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றையும் பாட உள்ளாராம். மேலும் இப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் அமைக்க நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதற்காக அவருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.