மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் பிரபு தேவாவின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா! வைரலாகும் புகைப்படம்
தமிழில் பல படங்களில் முதலில் நடன கலைஞராக பணியாற்றியவர் நடிகர் பிரபு தேவா. பின்னர் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக முதன் முதலில் ஹுரோவாக அறிமுகமானார் பிரபு தேவா.
அதனை தொடர்ந்து பல படங்களில் ஹுரோவாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான காதலன் திரைப்படம் அனைவரது மத்தியிலும் பிரபலமானது. இவர் ஒரு சிறந்த நடன கலைஞர், நடிகர் என்பதை தாண்டி இயக்குனராகவும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவர் இந்தியிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவரின் நடனத்தை பாராட்டி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் முதல் ஆண் குழந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. மேலும் இவர் நடிகை நயன்தாராவுடன் சில காலம் இருந்தார். ஆனால் சில நாட்களிலேயே இருவரும் பிரித்துவிட்டனர்.
தற்போது நடிகர் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது அவரின் இளமை கால குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.