மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீகார் பெண்ணுடன் பிரபுதேவாவுக்கு நடந்த ரகசிய திருமணம்.. "ஒன்னா வாழ்ந்துட்டு இருக்காங்க" - உண்மையை போட்டுடைத்த ஜெயந்தி கண்ணப்பன்..!!
நடனம், இயக்கம், நடிப்பு என திரையுலகில் பன்முக நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரபுதேவா. இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் கூறுவார்கள். இவரின் நடிப்பில் "மைடியர் பூதம்" திரைப்படம் வெளியாகி குழந்தைகளை சமீபத்தில் கவர்ந்தது.
தொடர்ந்து பிரபுதேவா தனது நடனகுழுவில் பணியாற்றி வந்த ரமலத் என்ற பெண்ணை காதலித்து 1995-ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் கடந்த 2011-ல் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது. இந்த நிலையில், பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் ஜெயந்தி கண்ணப்பன் பிரபுதேவா குறித்து கூறியுள்ளார்.
அவர் தனியார் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், "பிரபுதேவா ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலிப்பதாக கூறி என்னிடம் அவரை அழைத்து வந்துநின்றார். ரமலத் குஷ்புவின் எட்டுப்பட்டி ராசா பாட்டில் முதல் வரிசையில் நின்று நடனமாடியிருப்பார்.
அவர் நடனாடுவதை கண்டு அருமையாக ஆடுவார், எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார் பிரபு. பின் வில்லு படத்தின் போது நயன்தாராவை காதலிப்பதாக பிரபுதேவா திருமணம் வரை சென்று, பின்னர் இறுதியாக ரமலத்தின் தலையீடால் அந்த திருமணம் கைகூடாமல் போனது.
இந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு சமயத்தில் 2020-ல் பீகாரைச் சார்ந்த மருத்துவர் ஹிமானிசிங் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை பிரபுதேவா ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அது உண்மைதான்" என்று தெரிவித்துள்ளார்.