மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. இவரா.! கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகும் பிரபல கியூட் நடிகை! வெளிவந்த சூப்பரான அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்து திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் முன்னராக கேப்டன் மில்லர் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு படத்தில் மாநகரம் படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷனும் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற திரைப்படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதை உறுதி செய்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகிறது.