திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடங்காத அசுரன்.. தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.! வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!
தனுஷின் ராயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் ராயன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷின் 50வது படமான இதன் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது படம் வெளியாவதற்கான, தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிக்கும் பிரபலங்கள்
ராயன் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராயன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில் ராயன் படம் குறித்த அப்டேட் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதாவது இன்று மாலை 6மணிக்கு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'அடங்காத அசுரன்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
Raayan first single today at 6pm pic.twitter.com/2oCXpunEbn
— Dhanush (@dhanushkraja) May 9, 2024