மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருக்கும் சொல்லாமல் ரகசிய திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்! புகைப்படம் இதோ.
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக் செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.
இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, ஒண்ணா விளமபர படங்கள், டப்மாஷ் வீடியோ இப்படி ஜாலியாக சுற்றித்திரிந்த இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். திருமணம் எப்போது என்று அவர்களிடம் கேட்டால் அவர்களும் சரியான பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் ராஜா ராணி சீரியல் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து வெளியூர் சென்றிருந்த இவர் நிஜத்திலும் திருமணம் செய்துகொண்டதாக பிரபல விஜய் டிவி நடிகரும், ஆர்ஜேவுமான மிர்சி செந்தில் கூறியுள்ளார்.
இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்று புகைப்படம் போட்டு வாழ்த்தியுள்ளார் செந்தில். இவர்களது திருமணம் குறித்த என தகவல்களும் வெளியாகாத நிலையில் இவருவரும் திருமணம் செய்துகொண்டதாக செந்தில் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.