கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு நேர்ந்த சந்தோசம்!. என்ன விஷயம் தெரியுமா ?
குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். அதன்பிறகு ஒருசில படங்களில் மட்டுமே நடித்த இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெள்ளித்திரையில் பிரபலமாகவில்லை. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக தோன்றினார்.
கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்க இவருக்கு ஜோடியாக செண்பா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆலியா மானசா நடித்துவந்தார். கதையில் கணவன் மனைவியான இவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் ரகசியமான முறையில் நடைபெற்று பின்னர் அனைவர்க்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை ஆலியா மானசா புது வீடு ஓன்று கட்டி அந்த வீட்டிற்கு வீட்டில் கிரக பிரவேசம் நடைபெற்றுள்ளது.
இதனை நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கணவன் - மனைவி இருவருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துளனர்.