மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ராஜா ராணி செண்பா எப்படி இருக்கிறார் தெரியுமா.? புகைப்படத்தை வெளியிட்ட கணவர்.!
விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் சினித்திரையில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் - ஆலியா மானசா. கார்த்திக் - செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் தங்கள் திருமணம் குறித்த தகவலை வெளியே கூறினார். அதுமட்டும் இல்லாமல் ஆலியா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி ஆலியாவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சஞ்சீவ். இவர்கள்தான் என்னுடைய வாழ்க்கை எனவும் அந்த பதிவில் சஞ்சீவ் பதிவிட்டுள்ளார்.