ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வாவ்.. நடிகை ஸ்ரீதேவி தன் செல்ல மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா! அட.. பெயரோட அர்த்தம் என்னனு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு போதிய பட வாய்ப்புகள் வராத நிலையில், அவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் களம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, கல்யாண பரிசு என பல தொடர்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி ஒளிப்பதிவாளர் அசோக் சின்தலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நடிகை ஸ்ரீதேவி தனது மகளுக்கு சித்தாரா சின்தலா என பெயர் சூட்டியுள்ளார். சித்தாரா என்றால் நட்சத்திரம் என்று அர்த்தமாம். இந்த நிலையில் பெயர் சூட்டுவிழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகை ஸ்ரீதேவி தனது குழந்தையை தான் சிதா என செல்லமாக அழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.